இன்று இலங்கையின் கத்தோலிக்க மக்கள் மருத மடு திருத்தலத்தின் விழாவை மிக மிக விமரிசையாக கொண்டாடினார்கள். ஐந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த இலங்கை கத்தோலிக்க விசுவாசம் ஆரம்பத்தில் வேருன்றிய காலத்தில் மாந்தை பகுதியில் ஆரம்பித்த இவ் மரியாளின் வணக்கம் மருத மடுவில் வேதகலாபனை காரணமாய் நிலைபெற்று இன்று இலங்கை வாழ் மக்கள் யாவருக்கும் இன, மத பேதம் இன்றி பரந்துள்ளதுள்ளது.
தமிழ், சிங்கள மொழிகளில் திருப்பலி நடை பெற்றது முக்கிய ஆசிர்கள் லத்தின் மொழியில் வழங்கப்பட்டன.
நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த எராளமான தமிழ், சிங்கள கத்தோலிக்க, இந்து, பெளத்த மக்கள் இவ் வழிபாடுகளில் பங்குபற்றினர்.
மருத மடு மாதவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக